Friday, July 21, 2023

#217 - 639-640-641 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

639. ஸ்ரீ அனீஶாய நம:

ஸேனெ ஸேனாபதிய ரக்ஷிபஅனீஶனேநமோ

நீனேவெ ஶனு நினகெ3 ஸமரு இல்ல எல்லு

நீனேவெ ஏக ஸ்ரீ பி3ரம்மா ஶிவாதி3

நினகெ3 யாரூ இல்ல நீனெ ஸ்வாமி அனீ 

அரசர்களை காப்பவனே. அனீஷனே உனக்கு என் நமஸ்காரங்கள். நீயே அனைவருக்கும் தலைவன். உனக்கு எங்கும் சமமானவர் இல்லை. நீயே ஸர்வோத்தமன். லட்சுமிதேவியின் தலைவன். பிரம்மா சிவன் முதலானோர்க்கு தலைவன். உனக்கு தலைவன் என்று யாரும் இல்லை. நீயே அனைவருக்கும் ஸ்வாமி. 

640. ஸ்ரீ ஶாஶ்வதாய நம:

4க்தர்கெ3 ப்ராண எந்த3ரெ இந்தி3ரியபடுத்வ ஓஜஸ்

ப்ரத3 நீனுஶாஶ்வதநமோ நினகெ3 4க்தபால

ஸௌந்த3ர்யாதி3ரூப மோஹாதி3கு3 ஸ்ருஷ்ட்யாதி33

கர்தா பூர்ணா நீ அவிகார ஸ்வதந்த்ர ஶாஶ்வதனு 

பக்தர்களுக்கு ப்ராணனை அருள்பவனே. இந்திரியங்கள், ஓஜஸ் (சக்தி) ஆகியவற்றை அருள்பவனே. ஶாஶ்வதனே. உனக்கு என் நமஸ்காரங்கள். பக்தர்களை காப்பவனே. ஸௌந்தர்ய முதலான ரூப குணங்களை கொண்டவனே. ஸ்ருஷ்டி முதலான அஷ்ட கர்த்ருத்வங்களை செய்பவனே. விகாரம் இல்லாதவனே. நீ ஸ்வதந்த்ரன்.  நிரந்தரமானவன். 

641. ஸ்ரீ ஸ்தி2ராய நம:

ஶத்ருக3தி நிவாரண மாள்பஸ்திரநமோ எம்பெ3

ஸதா3 அவ்யய அச்யுத அனிர்விண்ண அசஞ்சல

எந்த2 தோ3ஷவு ந்யூனதெயு தௌ3ர்ப3ல்யாதி33ளில்ல

ஸதா3 ஆனந்த3 33ஞான ஸ்வேச்சாபூர்ண ப்ரவ்ருத்த 

எதிரிகளை அழிப்பவனே. ஸ்திரனே உனக்கு என் நமஸ்காரங்கள். மாற்றம் இல்லாதவனே. அழிவு இல்லாதவனே. ஸர்வோத்தமனே. சஞ்சலம் அற்றவனே. எவ்விதமான தோஷமோ, குறைகளோ, பலவீனங்களோ இல்லை. எப்போதும் ஆனந்த, பல, ஞானங்களை கொண்டவனே. உன் இஷ்டப்படியே செயல்களை செய்பவனே. 

**


No comments:

Post a Comment