Monday, July 24, 2023

#219 - 645-646-647 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

645. ஸ்ரீ விஶோகாய நம:

ஶோகரஹிதனு நீவிஶோகநமோ நமோ

ஶோகரஹிதனாத்34ரிந்த3 ஶுக்ர என்னுத்தெ ஶ்ருதியு

ஶோக நீகி3 முக்தராத3வர்கெ3 ஸ்வாமி ஶ்ரயனு

அகளங்க விஶேஷ ஸுக2ஸ்தா2 வைகுண்டவாஸ 

சோகங்கள் அற்றவனே. விோகனே. உனக்கு என் நமஸ்காரங்கள். சோகங்கள் அற்றவன் ஆகையால், நீ ஶுக்ரன் - என்று ஸ்ருதிகள் சொல்கின்றன. முக்தர்களுக்கு அவர்களின் சோகங்களை நீக்கி, ஸ்வாமி ஆகிறாய். களங்கமற்ற விசேஷமான சுக ஸ்தானமான வைகுண்டத்தில் வசிப்பவனே. 

646. ஸ்ரீ ஶோக நாஷனாய நம:

ஶோகனாஷ மாடு3ஶோக நாஷனநமோ எம்பெ3

ஶோகனாஷ மாட3ல்பட்ட முக்தருக3 நியாமக

மக்களன்ன களெதி3த்33 தே3வகிகு3 விப்ரனிகு3

மக்களன்ன தந்து3கொட்டு ஶோகஹர ஸ்ரீகிருஷ்ண 

சோகங்களை அழிப்பவனே. ஶோகநாஷனனே உனக்கு என் நமஸ்காரங்கள். சோகங்கள் அற்றவர்களான முக்தர்களை நியாமகம் செய்பவனே. (கிருஷ்ணனுக்கு முன்னர் பிறந்த) தன் குழந்தைகளை இழந்த தேவகிக்கும், வசுதேவனுக்கும் அவர்களின் குழந்தைகளை திரும்பக் கொண்டு வந்து காட்டிய சோகங்களை போக்குபவனே ஸ்ரீகிருஷ்ணனே. 

647. ஸ்ரீ அர்ச்சிஷ்மனே நம:

வஜ்ர எந்த3ரெ மஹாசாதுர்யப3 இருவவ

அர்ச்சிஷ்மான்நமோ நினகெ3 மஹஸமர்த்த ஸ்ரீகிருஷ்ண

நீச காலயவனன்ன நின்ன தேஜஸ்ஸிம் மோஹிஸி

முசுகுந்த3 த்3ருஷ்டியிந்த3 4ஸ்மமாடி3ஸிதி3யோ 

வஜ்ர என்றால் மிகவும் அறிவுகூர்மை உள்ளவன். அர்ச்சிஷ்மனே உனக்கு என் நமஸ்காரங்கள். மஹா ஸமர்த்தனே ஸ்ரீகிருஷ்ணனே. நீசனான காலயவனை உன்னுடைய தேஜஸ்ஸினால் மயக்கி, அவனை முசுகுந்தனின் பார்வையால் பஸ்மம் ஆக்கியவனே. 

***

No comments:

Post a Comment