Monday, November 28, 2022

#48 - 126-127-128 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***   

126. ஸ்ரீ மஹாதபஸே நம:

மஹாஸமர்த்த2 ஸம்பூர்ண நீமஹாதபஸே

அஹர்நிஶி ஶரணாதெ3 மாம்பாஹி ஸர்வக்ஞ 43வன்

மஹார்ஹ நீ ஸுகக்ஞான 3லரூப ஹயமுக2

மஹிதா3 ஸ்ரீஹரே கிருஷ்ண வேத3வ்யாஸ கபில 

அபாரமான சாமர்த்தியம் கொண்டவன் நீ. மஹாதபஸே உனக்கு என் நமஸ்காரங்கள். இரவும் பகலுமாக உன்னிடம் நான் சரணடைந்தேன். என்னை காப்பாயாக. ஸர்வக்ஞனே. பகவந்தனே. நீ சுக ஞான பல ரூபனாக இருக்கிறாய். ஹயக்ரீவனே. மஹிதாஸனே. ஸ்ரீஹரியே. கிருஷ்ணனே. வேதவ்யாஸனே. கபிலனே. 

127. ஸ்ரீ ஸர்வகா3 நம:

ஸர்வ ஜீவாந்தஸ்யஸர்வக3னேஸ்வாமி நமோ எம்பெ3

ஸர்வ நியாமக ஸர்வவனு திளித3வனு நீ

ஸர்வஸ்தா2னாகி3 வேதா3ந்த ஸூக்ததி3 உக்த

ஸர்வத்ர ப்ரஸித்3தோ3பதே3ஶாத் எந்து3 ஸ்ரீ விஷ்ணு 

அனைத்து ஜீவர்களிலும் இருப்பவனே. ஸர்வகனே. ஸ்வாமியே உனக்கு என் நமஸ்காரங்கள். அனைத்தையும் நடத்துபவன் நீயே. அனைத்தையும் அறிந்தவன் நீயே. அனைத்து இடங்களிலும் வியாபித்திருக்கிறாய். அனைவருக்கும் தலைவனே. வேதாந்த ஸூக்தமான பிரம்ம ஸூத்ரத்தில் - ஸர்வத்ர ப்ரஸித்த அதிகரணத்தில் இவ்வாறே சொல்லப்பட்டிருக்கிறது. ஸ்ரீவிஷ்ணுவே. 

128. ஸ்ரீ ஸர்வவிதே3 நம:

தா3த்ருத்வாதி3 ஸத்3ருஷ 4ர்மலாப4 ஒத3கி3ஸுவி

ஸர்வவித்நமோ நினகெ3 ஸர்வக்ஞ ஞானப்ரதா3

ஸர்வவதிளித3 நின்ன திளிவ ஞானலாப4வீயோ

ஸர்வோத்பாத3 ஸர்வக3 ஸர்வத்ர வேத்3  

கருணை முதலான குணங்களால் தரிசனம் அளித்து, பலன்களைக் கொடுப்பவனே. ‘ஸர்வவித் உனக்கு நமஸ்காரங்கள். ஸர்வக்ஞனே. ஞானத்தை அளிப்பவனே. அனைத்தையும் அறிந்தவனே. உன்னை அறியும் ஞான லாபத்தை அளிப்பாயாக. அனைத்தையும் படைப்பவனே. அனைத்து இடங்களிலும் வ்யாப்தனே. அனைத்து இடங்களிலும் / அனைவராலும் புகழப்படுபவனே. ஈனே.

***



Sunday, November 27, 2022

#47 - 123-124-125 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***  

123. ஸ்ரீ ஶாஶ்வதாய நம:

ஏகப்ரகாரவாகி3ருவஶாஶ்வதநமோ ஸ்வாமி

ஸுக2 3லஞானதி3 பூர்ணனு நித்யனு அவ்யயனு

முக்தரிகு3 ஸ்வாமியாகி3ருவ ஶாஶ்வத நீனு

விகார நினகி3ல்ல ஶாஶ்வத ஏகப்ரகாரனு 

எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பவனே ‘ஶாஶ்வதனே உனக்கு நமஸ்காரங்கள். சுக, பல, ஞான ஆகியவற்றை முழுமையாகக் கொண்டவனே. நித்யனே. அழிவில்லாதவனே. முக்தர்களுக்கும் ஸ்வாமியாக இருக்கும் ஶாஶ்வதன் நீயே. உனக்கு எவ்வித குறைகளும் இல்லை. 

124. ஸ்ரீ ஸ்தா2ணவே நம:

ஜனரு ஸர்வரலி ஶாஶ்வத ஸ்தா2யியாகி3ருவ

கொனெ இல்லதா3னந்த3 பூர்ணஸ்வரூப நீனேஸ்தா2ணு

நமிபெ நினகெ3 நா ஸத்தாதி33 தா3தனெ

ப்ராணிக3 தா4ரகனெ ஶரணெம்பெ3னோ அனக4 

மக்கள் அனைவரிலும் நிரந்தரமாக நிலைத்திருக்கிறாய். எல்லையில்லாத பூர்ண ஸ்வரூபனே. நீயே ‘ஸ்தாணு. உனக்கு என் நமஸ்காரங்கள். பிறப்பு, இறப்பு முதலான அனைத்தையும் கொடுப்பவனே. ப்ராணிகளை தனக்குள் தரித்தவனே. அழிவில்லாதவனே. உன்னை நான் வணங்குகிறேன். 

125. ஸ்ரீ வராரோஹாய நம:

வர எந்த3ரெ ஸ்ரேஷ்ட ஆரோஹனெந்த3ரெ மேலிஹ

வராரோஹனேநமோ ஸர்வோத்க்ருஷ்டனே ஸர்வஸ்வாமி

ஶிரிதே3விபதி நீ விதி4 ஶிவ ஶக்ராதி3ஸுர

நரம்ருக த்ருணாதி33ளு நின்னாதீ4 நீ ஸ்வாமி 

வர என்றால் சிறந்த. ஆரோஹ என்றால் அதற்கும் மேல். வராரோஹனே உனக்கு என் நமஸ்காரங்கள். அனைத்தையும் செய்பவனே. அனைவரின் ஸ்வாமியே. ஸ்ரீதேவியின் பதியே. பிரம்மா, சிவ, இந்திராதி தேவதைகள், மனிதர்கள், மிருகங்கள், புல், பூச்சி முதலான அனைத்துமே உன் அதீனமே ஸ்வாமி.

***



Saturday, November 26, 2022

#46 - 120-121-122 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

120. ஸ்ரீ விஶ்வயோனயே நம:

யக்ஞ ஶாலெயொளு ஹோகு3வி 4க்தர ரக்ஷிஸுவி

விஶ்வயோனியேநமிபெ வாமன ஶக்ரவரத3

வாயுதே3வர ஜனக ஸர்வ ஜக3த்காரணனெ

ஈஜ்ய பூஜ்யனே நீ ஸதா3காயோ என்ன கருணாளோ 

யக்ஞ சாலைக்கு நீ சென்று, அங்கிருக்கும் பக்தர்களை காக்கிறாய். ‘விஶ்வயோனியே உனக்கு என் நமஸ்காரங்கள். வாமனனே. அர்ஜுனனுக்கு அருளியவனே. வாயுதேவரின் தந்தையே. அனைத்து உலகங்களுக்கும் காரணமானவனே. பூஜிக்கத் தக்கவனே. என்னை எப்போதும் காப்பாயாக. கருணைக் கடலே. 

121. ஸ்ரீ ஶுசிஶ்ரவஸே நம:

வேத3ததிக3ளலி ப்ரஸித்34னாகி3 இருவந்த2

கீர்த்திமான்ஶுசிஶ்ரவாநமோ நினகெ3 ஸர்வோத்தம

பவித்ரகர ஸ்ரவணீய நிர்தோ3 கீர்த்தி ஶஸ்

ஆத3ரதி3 நின்னய கதா2 கேளெ பாபஹரவு 

வேதங்களில் புகழ்பெற்று போற்றப்படுபவனே ‘ஶுசிஶ்ரவனே உனக்கு என் நமஸ்காரங்கள். ஸர்வோத்தமனே உன்னை வணங்குகிறேன். பவித்ரமான, கேட்கத் தகுந்த, தோஷங்கள் அற்ற, புகழ் மிக்க உன்னுடைய கதைகளை, பக்தி மரியாதைகளுடன் கேட்டால், அது நம் பாவங்களை போக்குகிறது. 

122. ஸ்ரீ அம்ருதாய நம:

மரணவில்லத3 நீஅம்ருதநமோ நினகெ3

அம்ருத நீ அனந்தாஸனாதி33 ஆதா4ரனு

அம்ருதனீ பூர்ணகு3 நித்யனு ஆத்33ரிந்த3

மரணவில்லத3 முக்தாஸ்ரயனு ரமாபதியு 

மரணம் இல்லாதவனே. ‘அம்ருதனே உனக்கு என் நமஸ்காரங்கள். அனந்தாஸன முதலான இடங்களில் நீ வசிப்பவன். அனைத்து குணங்களையும் பூரணமாக கொண்டவன் நீ. நித்யனே. ஆகையால், மரணமில்லாத முக்தியை கொடுப்பவன் நீயே. ஹே ரமாபதியே.

****