Monday, November 14, 2022

#34 - 84-85-86 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***  

 84. ஸ்ரீ து3ராத3ர்ஷாய நம:

பராப4 நினகி3ல்லது3ராத3ர்ஷநமோ எம்பெ3

யாரிந்த3லு நினகெ3 அபஜயவில்ல எந்தி3கு3

ம்ருத்யு ம்ருத்யு நரஸிம்ஹ வராஹ ஹயாஸ்ய கிருஷ்ண

பரஶுத4 ராம ராக4 கல்கி நீ அஜித 

உனக்கு தோல்வி என்பதே கிடையாது. ‘துராதர்ஷனே உனக்கு நமஸ்காரங்கள். யாராலும் என்றும் உனக்கு தோல்வி கிடையாது. ம்ருத்யுவிற்கே ம்ருத்யுவான நரசிம்மனே. வராகனே. ஹயக்ரீவனே. கிருஷ்ணனே. பரசுராமனே. ராமனே. ராகவனே. கல்கியே. நீ தோல்வியே இல்லாதவன். 

85. ஸ்ரீ க்ருதக்ஞாய நம:

க்ருதகர்ம ஞானி நீனுக்ருதக்ஞநமோ நினகெ3

க்ருதம்ஸ்மர ஸ்ருதிஉக்தி அனுக்3ரஹ மாடு3வியோ

ஸ்வாராத4னாரூப கர்மக3 திளித3வனு நீ

தத்தத்3யோக்3 2லதா3 ஸ்ருஷ்டாதி33  

உன் வேலைகளை சரியாகச் செய்யும் ஞானி நீ. ‘க்ருதக்ஞனே உனக்கு நமஸ்காரங்கள். ‘க்ருதம் ஸ்மர என்னும் ஸ்ருதி இதையே சொல்கிறது. எனக்கு அருள்வாயாக. அவரவர்களின் ஆராதனைகள், ரூப, கர்மங்களை நன்றாக அறிந்தவன் நீ. அதற்கேற்ப அவர்களுக்கு பலன்களை அளிக்கிறாய். ஸ்ருஷ்டி முதலான கர்மங்களை செய்பவன் நீயே. 

86. ஸ்ரீ க்ருதயே நம:

இதரரிம் மாட3லிக்கெ ஸாத்4யவில்லத3 கர்மவ

ஸ்வதந்த்ர ஸச்சக்த நீமாள்பெக்ருதிநமோ நமஸ்தே

பத்4மஜ ஸ்துதிஸிஹரு ராவணவத4 கர்மவு

இதரரிம் ஸாத்4யவாக3த்து நீ மாடி3தி3 எந்து3 

மற்றவர்களால் செய்ய முடியாத செயல்களை நீ ஸ்வதந்த்ரமாகவே செய்து முடிப்பாய். ‘க்ருதியே உனக்கு நமஸ்காரங்கள். ராவண வத காரியமானது, வேறு யாராலும் செய்ய முடியாத செயலாகும் என்று பிரம்மதேவர் முதலானோர் உன்னை புகழ்கின்றனர்.

***


No comments:

Post a Comment