Saturday, November 5, 2022

#25 - 57-58-59 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

57. ஸ்ரீ அக்3ரஹ்யாய நம:

து3ஷ்டஜனக3ளிந்த3 க்3ரஹண மாடி3க்கொளலிக்கெ

எஷ்டொனு யோக்3யனல்லத3அக்3ராஹ்யனேநமோ எம்பெ3

இஷ்ட 4க்தரிந்த3 நீனு ஸாகல்ய திளியலாரி

எஷ்டு நின்னிச்செயிம் திளிஸுவியோ அஷ்டு லாப4வு 

துஷ்ட மக்களால் புரிந்து கொள்ளப்பட முடியாத தகுதியைக் கொண்ட ‘அக்ராஹ்யனே உனக்கு நமஸ்காரங்கள். இஷ்ட பக்தர்களால் கூட உன்னை முழுமையாக அறிய முடியாது. உன்னுடைய இஷ்டத்தினால் நீ எவ்வளவு காட்டிக் கொள்கிறாயோ, அதுவே அவர்களின் லாபம் ஆகும். 

58. ஸ்ரீ ஶாஶ்வதாய நம:

எந்தெ3ந்து3 எல்லெல்லு பே43 பரிணாமாதி3 இல்லதெ3

ஸதா3 பூர்ணனாகி3ருவிஶாஶ்வதனேநமோ எம்பெ3

ஸ்தா2 காலாதி33ளிந்த3 விகாரவில்ல நினகெ3

எந்தெ3ந்து3 எல்லெல்லு அச்யுதனு ஶாஶ்வதனு நீனு 

என்றும், எங்கேயும், பேதங்கள் / மாற்றங்கள் ஆகியவை இல்லாமல் எப்போதும் பூர்ணனாக இருக்கிறாய். ‘ஶாஶ்வதனே உனக்கு நமஸ்காரங்கள். கால, தேசங்களில் எவ்வித மாற்றங்களும் இல்லாதவன் நீ. அச்யுதன். ஶாஶ்வதன் நீயே. 

59. ஸ்ரீகிருஷ்ணாய நம:

சேஷ்டகனு நீ ஸர்வதா3 ஸர்வகர்தனாகி3ருவி

கிருஷ்ண நமோ 3 ஞானாத்3யமித கு3 நமஸ்தே

கார்ஷ்ண ஶீலனு ஸர்வ ஜக3த்தின நியாமக

நீ ஷட்கு3ணைஶ்வர்யாதி3 பூர்ணனெந்து3 ஆக3மோக்தவு 

செயல்களை செய்விப்பவன் நீ. எப்போதும் அனைத்தையும் செய்பவனாக நீ இருக்கிறாய். கிருஷ்ணனே உனக்கு நமஸ்காரங்கள். பல, ஞானங்களை அபாரமாக கொண்டவனே. கருமை வண்ணம் கொண்டவனே. அனைத்து உலகங்களின் நியாமகனே. நீ ஷட்குண - ஐஸ்வர்யங்களால் பூர்ணன் என்று அனைத்து ஆகமங்களும் சொல்கின்றன.

***


No comments:

Post a Comment