Thursday, November 3, 2022

#23 - 51-52-53 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

51. ஸ்ரீ விஶ்வகர்மணே நம:

ஸர்வகர்மக3ளிகெ3 காரணனாகி3 இருவி நீ

விஶ்வகர்மனேநமோ 3ருட3வாஹன விஶ்வேஶ

ஸர்வ கர்மக3ளு ஸ்வதந்த்ர நின்ன தெ3ஸெயிந்த3லே

ஸர்வதா3 கர்மதோ3ஷாதி3 லேபவில்லத3ந்தர்யாமி 

அனைத்து கர்மங்களுக்கும் நீயே காரணன். விஶ்வகர்மனே உனக்கு நமஸ்காரங்கள். கருடவாகனனே. விஶ்வேஷனே. ஸ்வதந்த்ரனான உன்னிடமிருந்தே அனைத்து கர்மங்களும் துவங்குகின்றன. எப்போதும் எவ்வித கர்ம தோஷங்களும் இல்லாதவன் நீயே. 

52. ஸ்ரீ மனவே நம:

ஞ்யாத்வா நீமனுநினகெ3 நமோ திளிஸோ எனகெ3

விதத கு3ணரூப க்ரியாதி3 மஹாத்ம்யக3ளனு

காலதே3ஶவ்யாப்தனே ஜீவ பி3ம்பா3ஹ்வயனே ஸ்ரீ

ஸதா33 வேத்3 ஸ்ரீவேத3வ்யாஸ ஸனத்ஸுஜாதா 

அனைத்தையும் அறிந்தவன். மனு - உனக்கு நமஸ்காரங்கள். உன்னுடைய குண, ரூப, க்ரியாதிகளின் சிறப்புகளை எனக்கு விளக்குவாயாக. கால, தேசமாக எப்போதும், எல்லா இடங்களிலும் வ்யாப்தனே. ஜீவர்களில் பிம்பனாக இருப்பவனே. ஸ்ரீலட்சுமிதேவியின் தலைவனே. நல்ல ஆகமங்களால் புகழப்படுபவனே. ஸ்ரீவேதவ்யாஸனே. ஸனத் ஸுஜாதனே. 

53. ஸ்ரீத்வஷ்ட்ரே நம:

தீ3ப்திமந்தாத்வஷ்ட்ராநமோ ஸ்ரீமன் நாராயண க்4ருணி

4க்த த்ரிவித4ரிகெ3 ஹொரகு3 ஒளகு3 ஸர்வத்ர

நக்ஷத்ர தடிஶ்சந்த்ர அர்க்கனந்த3தி3 ஹொளெயுவ

ஸ்வதேஜ:புஞ்ச ஸர்வகர்த்தா ஸ்பூர்த்தித3னு நீ த்4யேய 

ஒளிபொருந்தியவனே. த்வஷ்ட்ரா - உனக்கு நமஸ்காரங்கள். ஸ்ரீமன் நாராயணனே. மூன்று வித பக்தர்களுக்கும், அவர்களின் உள்ளேயும் வெளியேயும் இருப்பவனே. நட்சத்திரம், சூரியன், சந்திரன் ஆகியோரில் இருந்து ஒளிர்பவன் நீயே. அவர்களுக்கு ஒளி கொடுப்பவன் நீயே. அனைத்தையும் செய்விப்பவன். தியானிக்கப்பட வேண்டியவன் நீயே.

***


No comments:

Post a Comment