Wednesday, November 23, 2022

#43 - 111-112-113 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***

111. ஸ்ரீ ஸம்மிதாய நம:

ஸ்தூ2 அனிருத்34 மத்து லிங்க3தே3 ஸம்யக்நா

மாள்பஸம்மிதநமோ ப்ரக்ருதிப3ந்த4 ஸம்ஹரனே

லக்ஷணவு இதரரிகெ3 கொடு3வுதி3ல்லவு

ஹே லக்ஷ்மீபதே ஸம்யக் ப்ரமாணஸித்34 ஸலஹென்ன 

ஸ்தூல, அனிருத்த மற்றும் லிங்க தேகங்களை பாதுகாத்து, அழிப்பனே ‘ஸம்மிதனே உனக்கு நமஸ்காரங்கள். சம்சார பந்தனத்தை அழிப்பவனே. இந்த லட்சணங்கள் மற்றவர்களுக்கு பொருந்துவதில்லை. ஹே லட்சுமிபதியே. பிரமாணங்களால் சரியாக விளக்கப்படுபவனே. என்னை அருள்வாயாக. 

112. ஸ்ரீ ஸமாய நம:

ப்ராமாணிக யோக்3யபல போஷண ஶிக்ஷணகர்த்த

ஸமநமோ நமோ நினகெ3 லக்ஷ்மீஸமேத ஹரே

ஆம்னாய வைதி3 ப்ரமாண ஸித்33னாகி3ருவி நீ

ஸமனெனிபி ஸர்வரூபக3ளல்லி ஸமத்வதி3 

பிரமாணங்கள் சொல்வதைப் போல, தகுதி உள்ளவர்களுக்கு வலிமையை கொடுப்பவனே. தண்டனைகளை அளிப்பவனே. ‘ஸமனே உனக்கு நமஸ்காரங்கள். எப்போதும் லட்சுமிதேவி உடனே இருப்பவனே. ஸ்ரீஹரியே. வேத, வைதிக பிரமாணங்களால் விளக்கப்படுகிறாய். அனைத்து ரூபங்களிலும் (அவதாரங்களிலும்) நீ சமனாகவே, ஒரே மாதிரியாகவே இருக்கிறாய்.

113. ஸ்ரீ அமோகா4 நம:

2 ரஹிதவாத3 கர்மவான்அமோக4நமோ

எல்ல ஜக3ஜ்ஜன்மாதி3கர்த்த ஜீவரிகெ3 நீனு

ஷீல ஸாத4 2லவன்னு ஈவி 2லி நீனு

லீலா ப்ரமோத3 கர்மவுள்ளந்த2வனு ஆப்தகாம 

எவ்வித பிரதிபலன்களையும் எதிர்பார்க்காமல் கர்மங்களை செய்பவனே ‘அமோகனே உனக்கு நமஸ்காரங்கள். அனைத்து ஜீவர்களையும் படைத்து, அவர்களுக்கு அனைத்து செயல்களையும் செய்பவனே. அவர்களின் ஸாதனைகளுக்கு ஏற்ற பலன்களைக் கொடுக்கிறாய். உன் லீலைகளால் அற்புத செயல்களை செய்கிறாய். மிகவும் உற்ற நண்பனே.

***


No comments:

Post a Comment