Monday, November 21, 2022

#41 - 105-106-107 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***

105. ஸ்ரீ அமேயாத்மனே நம:

ஞாதுமஶக்ய ஸ்வரூபவான்அமேயாத்மாஸ்ரீபதே

ஸதா3 நினகெ3 நமோ ஸாகல்ய திளியத3வனு

நீ 3யதி3 நின்னிச்செயலி எஷ்டு திளிஸுவியோ

வேத்3 ஆகு3வி அஷ்டே த்வத்ப்ரஸாதி3ந்த3லே லப்4 

அறியமுடியாத ஸ்வரூபம் கொண்டவனே. ‘அமேயவான் உனக்கு நமஸ்காரங்கள். ஸ்ரீபதியே, யாரும் உன்னை முழுமையாக அறியமாட்டார்கள். நீ கருணையுடன், உன் இஷ்டப்படி எவ்வளவு தெரிய வைப்பாயோ, உன் பிரஸாதத்தினால் அவ்வளவே அறிவார்கள். வேத்யனே. 

106. ஸ்ரீ ஸர்வயோக வினிஸ்ருதாய நம:

ஸர்வத4னாதை3ஶ்வர்ய உத்பத்தி தா4மனாகி3ருவி

ஸர்வயோக3 வினி:ஸ்ருதநமோ ஸௌபா4க்3 நிதி4யே

ஸர்வோபாயக3ளு நின்னிச்சா ஶக்தியிந்த3லே ஸத்ய

கிமலப்4யம் 43வதி ப்ரஸன்னெ ஸ்ரீநிகேதனே. 

அனைத்து செல்வ, ஐஸ்வர்யங்களும் உற்பத்தி ஆகும் இடமாக நீ இருக்கிறாய். ‘ஸர்வயோக வினிஸ்ருதனே, உனக்கு நமஸ்காரங்கள். ஸௌபாக்யநிதியே.  அனைத்து செயல்களும், உன்னுடைய இச்சா சக்தியினாலேயே சாத்தியம். ‘கிமலப்யம் பகவதி ப்ரஸன்னெ ஸ்ரீநிகேதனே. பாகவத 10-39-2. (ஹே பரீட்சித் ராஜனே, பகவந்தனை திருப்திப்படுத்தியவர்களால், எதைதான் அடைய முடியாது?). 

107. ஸ்ரீ வஸவே நம:

எந்த2 ஐஷ்வர்ய 4 கொட3லிக்கெ யோக்3யவாகி3ஹவோ

அந்த2 4னவுள்ள வஸு நமோ மஹேஶ்வர்யபூர்ண

4க்தரிகெ3 அவரவர யோக்3யதானுஸார

யுக்தகாலதி3 கொடு3வி ஔதா3ர்யாதி3 கு3ணஸிந்தோ4 

எத்தகைய ஐஸ்வர்ய, செல்வங்களை கொடுப்பதற்கு தகுதியாக இருக்கிறதோ, அத்தகைய ஐஸ்வர்ய, செல்வங்களைக் கொண்ட வஸுவே உனக்கு நமஸ்காரங்கள். மிகச் சிறந்த செல்வங்களை முழுமையாகக் கொண்டவனே. பக்தர்களுக்கு அவரவர்களின் தகுதிக்கேற்ப, அவர்களின் தக்க காலத்தில் அவற்றை கொடுக்கிறாய். கருணைக் கடலே.

***


No comments:

Post a Comment