Thursday, November 10, 2022

#30 - 72-73-74 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

 ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

72. ஸ்ரீ ப்ரஜாபதயே நம:

சதுர்முக2 பி3ரம்மனிந்த3 ஸேவிதப்ரஜாபதயே

ஸதா3 நமோ பத்மஜாதி3 ப்ரஜெக3ளெல்லர ஸ்வாமி

ஹிததி3 ப்ரஜெக3 பாலிஸுவ ப்ரஜாபதி நீ

பத்மஜ பணெக3ண்ண ஶக்ராதி3 ஸஜ்ஜன வினுத 

சதுர்முக பிரம்மனால் வணங்கப்படுபவன். ‘ப்ரஜாபதயே. உனக்கு நமஸ்காரங்கள். பிரம்மன் முதலான அனைத்து பிரஜைகளின் ஸ்வாமி. அந்த பிரஜைகளை கருணையுடன் காக்கும் பிரஜாபதியே. தாமரைக் கண்ணனே. ருத்ரர், இந்திரன் முதலான ஸஜ்ஜனர்களால் வணங்கப்படுபவனே. 

73. ஸ்ரீ ஹிரண்யக3ர்ப்பா4 நம:

ஹிதவாத3 ரமணீயவாகி3ருவ ஞானவன்னு

உத3ரக3ர்ப்ப4தி3 உள்ளஹிரண்யக3ர்ப்ப4னேநமோ

மாத4வனே நீ ஞானாத்3 ஶேஷ கு3ணாதா4 ஸ்வாமி

பத்3மஜாண்ட3 ஹிரண்யாத்மகவு நின்னலி த்4ருதவு 

இதமான, அழகாக இருக்கக்கூடியதான ஞானத்தை தன் வயிற்றில் கொண்டவனே ‘ஹிரண்யகர்ப்பனே உனக்கு நமஸ்காரங்கள். மாதவனே. ஞானமே முழுமையாக உள்ளவன் நீ. குணங்களுக்கு ஆதாரமானவன் நீ. ஸ்வாமி. இந்த பிரம்மாண்டனே உன்னில் அடங்கியிருக்கிறது. 

74. ஸ்ரீ பூ43ர்ப்பா4 நம:

உத்கர்ஷகரண ஞானலப்4பூ43ர்ப்ப4னேநமோ

உத்கர்ஷ எந்த3ரெ ஸம்ருத்3தி4யனு கொடு3வுது3

ஹ்ருத்கு3 அந்தஸ்த2 பி3ம்ப3ஞான ஸாத4 கொலிது3

ப்ரஸாத3வித்து அபரோக்ஷக்கெ ஸிகு3வி பூ4வராஹ 

சிறப்பான ஞானத்தைக் கொடுக்கக்கூடிய ‘பூகர்ப்பனே உனக்கு நமஸ்காரங்கள். உத்கர்ஷ என்றால் அதிகமாக கொடுப்பது. நம் இதயக் குகையில் இருப்பவனே. ஸாதனைக்கு தரிசனம் அளிப்பவனே. பிம்பமூர்த்தியே. அபரோக்‌ஷ தரிசனமான பிரஸாதத்தை அளிப்பவனே. பூவராகனே.

***


No comments:

Post a Comment