Saturday, November 12, 2022

#32 - 78-79-80 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

78. ஸ்ரீ விக்ரமிணே நம:

நீ ஸ்ரேஷ்ட வ்யாபார மாள்பிவிக்ரமீநமோ நினகெ3

நீ ஸ்ருஷ்டி ஸ்தி2தி லயாத்4யகி2ளக1ர்த்த நாராயண

ஷீர்ஶாஸ்யகர பாதா3தி3யலு அவதாரத3ல்லு

நீ ஸதா3 தாரதம்யவில்லத3 நிர்தோ3ஷபூர்ண 

மிகச் சிறந்த செயல்களையே செய்கிறாய். ‘விக்ரமீ உனக்கு நமஸ்காரங்கள். ஸ்ருஷ்டி, ஸ்திதி, லய முதலான அனைத்தையும் செய்பவன். நாராயணன். புகழப்படத் தக்கவன். மூலத்திலும், அவதாரங்களிலும் நீ தாரதம்யம் இல்லாதவன் (எப்போதும் உயர்ந்தவன்). எவ்வித தோஷங்களும் அற்றவன். 

79. ஸ்ரீ 4ன்வினே நம:

உத3கவ ப்ரவர்த்திஸுவி4ன்வீநமோ நினகெ3

உத3ஶாயி நாராயண ஹ்ருஷிகே ஸாரங்க3பாணி

ஸுதி3வ்ய சக்ரஶங்க23தா4 4னஸு 2ட்3கா3தி3 3

ப்3ருஹத்33 ஸர்வதா4ரக நித்யத்ருப்த தர்ப்பக

தண்ணீரை தோற்றுவிக்கிறாய் (கங்கை). ‘தன்வீ உனக்கு நமஸ்காரங்கள். தண்ணீரில் படுத்திருப்பவன். நாராயணன். ஹ்ருஷிகேன். ஸாரங்கபாணி. திவ்யமான சக்ர, சங்கு, கதா ஆகியவற்றை தரித்திருப்பவன். வாள் ஏந்தியவன். மிகச் சிறந்த வலிமை பொருந்தியவன். அனைவருக்கும் ஆதாரமானவன். நித்ய த்ருப்தன். விருப்பங்களை நிறைவேற்றுபவன். 

80 ஸ்ரீ மேதா4வினே நம:

பு3த்தி4வந்தனேமேதா4விஸதா3 நமோ எம்பெ3

நித்ய நிஸ்ஸீம ஞான ஸ்வரூப ஸ்வதந்த்ர ஸர்வக்ஞ

நித்ய வேத33ளு நின்ன பு3த்தி4ஸ்த2வாகி3த்3து3 நீனு

போ3தி4ஸுவி பி3ரம்மனிகெ3 நாராயண ஹயஶீர்ஷா 

அறிஞனே. ‘மேதாவி உனக்கு நமஸ்காரங்கள். எப்போதும், எல்லைகளற்ற ஞானத்தைக் கொண்டவனே. ஸ்வதந்த்ரனே. ஸர்வக்ஞனே. வேதங்கள் நீ நித்யமாக இருந்து, பிரம்மனுக்கு போதிக்கிறாய். நாராயணனே. ஹயக்ரீவனே.

***


No comments:

Post a Comment