Tuesday, November 8, 2022

#28 - 66-67-68 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

66. ஸ்ரீ பராய நம:

ஸர்வோத்தம நீனுபரம்நமோ நமோ நமோ எம்பெ3

ஸ்ரீவரனே கு3ணபூர்ண பரம்பி3ரம்ம பரமாத்ம

ஸர்வவே3 பும்ஸூக்தாதி3யிம் முக்2 ப்ரதிபாத்3யனு

ஸர்வே ஸர்வக3னுஸத்யம் ஞானம் அனந்தம் பி3ரம்ம 

ஸர்வோத்தமனே. ‘பரம் உனக்கு நமஸ்காரங்கள். ஸ்ரீலட்சுமிதேவியின் தலைவனே. குணங்களால் நிறைந்தவனே. பரபிரம்மனே. பரமாத்மனே. அனைத்து வேதங்களாலும், புருஷ ஸூக்தாதிகளாலும், முக்கியமாக போற்றப்படுபவனே. ஸர்வேஷனே. அனைத்து இடங்களிலும் வ்யாப்தனே. ‘ஸத்யம் ஞானம் அனந்தம் பிரம்ம’ என்று அழைக்கப்படுபவனே. 

67. ஸ்ரீ ஶானாய நம:

நீ ஸ்வாமிஶானநமோ நினகெ3 ஸ்ரீ பூ4ரமண

ஸர்வஸ்ய வஷி ஸர்வஶைஶான நீனெ ஸ்வதந்த்ர

ஸ்வஸ்த2 ஸ்வயமேவ ராஜஸ்வராட் ஸர்வஸ்வாமி நீனு

ஸ்ரீவனஜஜ ருத்ராதி33ளிகு3 நீனேனெ ஸ்வாமி 

ஸ்வாமியே. ‘ஈஶானனே உனக்கு நமஸ்காரங்கள். ஸ்ரீ-பூ-ரமணனே. அனைவரையும் ஆள்பவனே. அனைவரின் தலைவனே. நீயே ஸ்வதந்த்ரன். வலிமையானவன். நீயே அனைவருக்கும் அரசன். அனைவரின் ஸ்வாமி. ஸ்ரீலட்சுமிதேவி, பிரம்மன், ருத்ரர் ஆகியோருக்கும் நீயே ஸ்வாமி. 

68. ஸ்ரீ ப்ராணாதா3 நம:

கண்ணு மொத3லாத3ந்த2 இந்தி3ரியக3 கொடு3வவ

ப்ராணத3னெநமோ எம்பெ3 இந்த்3ரிய அனிமிஷரு

இனாதி33 த்3வாரா என்னிம் ஸாத4னெ நீ மாடி3ஸி

நின்னத3ர்ஶனவித்து பாலிஸுவி கருணி ஸ்ரீ 

கண் முதலான இந்திரியங்களைக் கொடுப்பவன். ப்ராணதனே. உனக்கு நமஸ்காரங்கள். இனாதி முதலான இந்திரிய அபிமானி தேவதைகளின் மூலம், நீ என்னில் நின்று ஸாதனைகளை செய்வித்து, உன்னுடைய தரிசனத்தை அளித்து காக்கிறாய். கருணாளு. ஸ்ரீலட்சுமிதேவியின் தலைவனே.

***


No comments:

Post a Comment