Friday, November 18, 2022

#38 - 96-97-98 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***

96. ஸ்ரீ ப்ரத்யயாய நம:

ஞானிக3 இஷ்ட ஸித்3தி4 ஈவப்ரத்யயனெநமோ

சின்மயனெ நீ எனகெ3 ஸுப்ரஸன்னனாகோ3 ஸ்ரீ

நீனு எல்லரொள் இருவி நீனெ எல்லக்காஶ்ரய

ஞான ப்ரகாஶிஸி ஸர்வாபி3ஷ்ட ஈவி 3யாஸிந்தோ4 

ஞானிகளின் விருப்பங்களை நிறைவேற்றுபவனே. ‘ப்ரத்யயனே உனக்கு என் நமஸ்காரங்கள். சின்மயனே. நீ என் விஷயத்தில் மகிழ்வாயாக. ஸ்ரீலட்சுமிதேவியின் தலைவனே. நீ அனைத்திலும் இருக்கிறாய். நீயே அனைவருக்கும் கதியானவன். ஞானத்தைக் கொடுத்து, அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றுபவனே. கருணைக்கடலே. 

97. ஸ்ரீ ஸர்வத3ர்ஷனாய நம:

ஞானக்கெ யோக்3யராத3 ஸர்வர 3ர்ஷனகெ விஷயனு

நீனுஸர்வத3ர்ஷனநமோ நமோ ஸதா நமஸ்தே

2ணிக3ண்ண ஶர்வ எம்ப3 ருத்ரனிகெ3 லபி4ஸுவ

ஞான நீ ஒத3கி3ஸுவி ஸர்வத3ர்ஷனனே நமோ 

ஞானத்திற்கு யோக்யரான அனைவருக்கும் தரிசனம் அளிக்கத் தகுதியானவன் நீயே ‘ஸர்வதர்ஷனனே உனக்கு என் நமஸ்காரங்கள். நெற்றிக்கண் கொண்ட ஷர்வ எனப்படும் ருத்ரனுக்கு கிடைக்கும் ஞானம் நீ. அந்த ஞானத்தை எனக்கும் கொடுப்பாயாக. ‘ஸர்வதர்ஷனனே உனக்கு நமஸ்காரங்கள். 

98. ஸ்ரீ அஜாய நம:

அஞ்ஞானஜ தமஸ் பாப ஸ்வபா4வியாத3 க்ரூரர

தை3த்யர விதா3ரண மாள்பஅஜநமோ  நினகெ3

நஜாயத் இத்யஜ: ஜனார்த்34:’ ராமக்ருஷ்ணோக்தி

அஹம்த்வாம் ஸர்வபாபேப்4யோ மோக்ஷயிஷ்யாமிஎந்த3 

அஞ்ஞானிகளின், பாவ ஸ்வபாவங்களைக் கொண்டவர்களான, க்ரூரர்களை, தைத்யர்களை அழிக்கும் ‘அஜனே உனக்கு என் நமஸ்காரங்கள். பகவத் கீதை 18-66 ஸ்லோகத்தில் ஸ்ரீகிருஷ்ணன் சொல்வதைப் போல - என்னிடம் முழுமையான சரணாகதி அடைந்தால், நானே அனைத்து பாவங்களையும் விலக்கி, உனக்கு மோட்சத்தை அளிக்கிறேன் - என்றான்.

***


No comments:

Post a Comment