Friday, November 25, 2022

#45 - 117-118-119 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

117. ஸ்ரீ ருத்ராய நம:

ரோக3 த்3ரவண மாள்பருத்3ரனேநமோ நமோ எம்பெ3னு

4க்தக்ருத ஸ்துதி ஶப்33தி3ரமிபி ப்ரீதியலி

ருஜம் த்3ராவயதி இதிருத்3: தஸ்மாத் ஜனார்த்த4:’

ஹீகெ3 உக்தவு ஸூத்ர பா4ஷ்யத3லி நோட33ஹுது3 

நோய்களை அழிப்பவனே ‘ருத்ரனே உனக்கு என் நமஸ்காரங்கள். பக்தர்கள் செய்யும் ஸ்துதி, சப்தங்களில் நீ அன்புடன் வசிக்கிறாய். ஸூத்ர பாஷ்யத்தில் - ‘ருஜன் த்ராவயதி இதிருத்ர:’ என்று  சொல்லியபடி - துக்கத்தை / சம்சார பந்தனத்தை விலக்குபவன் ருத்ரன் எனப்படுகிறாய். 

118. ஸ்ரீ பஹுஶிரஸே நம:

3ஹு ஶிரஸ்கனு நீனுபஹுஶிராநமோ எம்பே3

3ஹுளவாகி3 நாடி33ளலி இருவவனெ

ஸஹஸ்ர ஶீர்ஷா புருஷ எந்தி3ஹுது3 ஶ்ருதி உக்தியு

ஸஹஸ்ர ஶப்33வு அனந்தவாசியாகி3 இஹுது3 

பல தலைகளைக் கொண்டவன். பஹுஶிரனே உனக்கு நமஸ்காரங்கள். நமக்குள் இருக்கும் ஏராளமான நாடிகளில் இருப்பவனே. ஸ்ருதியானது ‘ஸஹஸ்ர ஶீர்ஷா புருஷ:’ என்று உன்னை புகழ்கிறது. இதில் உள்ள ஸஹஸ்ர என்னும் சொல்லுக்கு ‘அனந்த என்னும் பொருள் கொள்ள வேண்டும். 

119. ஸ்ரீ 3ப்4ரவே நம:

ஸர்ப்ப நாஶனத3ல்லி நகுலனதெரதி3 இருவ

3ப்4ருவேநமோ என்னயதோ3 4யவ பரிஹரிஸோ

பு4வன சதுர்த3 தா4ரகனாகி3ருவியோ

ஸுப3 தேஜோமயனே ஆனந்த3ரூப மாம்பாஹி 

பாம்பினை அழிக்கும் கீரியைப் போன்றவனே ‘பப்ருவே உனக்கு நமஸ்காரங்கள். என்னுடைய தோஷங்கள், பயங்களை பரிகரிப்பாயாக. இந்த ஈரேழு பதினான்கு உலகங்களையும் தரித்திருப்பவனே. அற்புத வலிமையைக் கொண்டவனே. தேஜோமூர்த்தியே. ஆனந்த ரூபியே. என்னை காப்பாயாக.

***


No comments:

Post a Comment