Sunday, November 27, 2022

#47 - 123-124-125 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***  

123. ஸ்ரீ ஶாஶ்வதாய நம:

ஏகப்ரகாரவாகி3ருவஶாஶ்வதநமோ ஸ்வாமி

ஸுக2 3லஞானதி3 பூர்ணனு நித்யனு அவ்யயனு

முக்தரிகு3 ஸ்வாமியாகி3ருவ ஶாஶ்வத நீனு

விகார நினகி3ல்ல ஶாஶ்வத ஏகப்ரகாரனு 

எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பவனே ‘ஶாஶ்வதனே உனக்கு நமஸ்காரங்கள். சுக, பல, ஞான ஆகியவற்றை முழுமையாகக் கொண்டவனே. நித்யனே. அழிவில்லாதவனே. முக்தர்களுக்கும் ஸ்வாமியாக இருக்கும் ஶாஶ்வதன் நீயே. உனக்கு எவ்வித குறைகளும் இல்லை. 

124. ஸ்ரீ ஸ்தா2ணவே நம:

ஜனரு ஸர்வரலி ஶாஶ்வத ஸ்தா2யியாகி3ருவ

கொனெ இல்லதா3னந்த3 பூர்ணஸ்வரூப நீனேஸ்தா2ணு

நமிபெ நினகெ3 நா ஸத்தாதி33 தா3தனெ

ப்ராணிக3 தா4ரகனெ ஶரணெம்பெ3னோ அனக4 

மக்கள் அனைவரிலும் நிரந்தரமாக நிலைத்திருக்கிறாய். எல்லையில்லாத பூர்ண ஸ்வரூபனே. நீயே ‘ஸ்தாணு. உனக்கு என் நமஸ்காரங்கள். பிறப்பு, இறப்பு முதலான அனைத்தையும் கொடுப்பவனே. ப்ராணிகளை தனக்குள் தரித்தவனே. அழிவில்லாதவனே. உன்னை நான் வணங்குகிறேன். 

125. ஸ்ரீ வராரோஹாய நம:

வர எந்த3ரெ ஸ்ரேஷ்ட ஆரோஹனெந்த3ரெ மேலிஹ

வராரோஹனேநமோ ஸர்வோத்க்ருஷ்டனே ஸர்வஸ்வாமி

ஶிரிதே3விபதி நீ விதி4 ஶிவ ஶக்ராதி3ஸுர

நரம்ருக த்ருணாதி33ளு நின்னாதீ4 நீ ஸ்வாமி 

வர என்றால் சிறந்த. ஆரோஹ என்றால் அதற்கும் மேல். வராரோஹனே உனக்கு என் நமஸ்காரங்கள். அனைத்தையும் செய்பவனே. அனைவரின் ஸ்வாமியே. ஸ்ரீதேவியின் பதியே. பிரம்மா, சிவ, இந்திராதி தேவதைகள், மனிதர்கள், மிருகங்கள், புல், பூச்சி முதலான அனைத்துமே உன் அதீனமே ஸ்வாமி.

***



1 comment: