Thursday, June 1, 2023

#171 - 501-502-503 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

501. ஸ்ரீ தே3வப்4ருதே நம:

த்3யுதி 3லாதி33 ஸம்பூர்ண நிதி4 தா4ரகனு

மாத4வனேதே3வப்4ருத்நமோ நமோ எம்பெ3

நீனு தே3வதெக3 தா4ரகனு அவருக3

த்3யுதிப3லாதி33 ப்ரவர்த்தகனு ஶ்ரயனு 

தேஜஸ், வலிமைகளின் முழுமையான நிதியே; அவற்றை அளிப்பவனே. மாதவனே. தேவப்ருதே உனக்கு என் நமஸ்காரங்கள். நீ தேவதைகளின் தலைவனே. அவர்களின் தேஜஸ், வலிமைகளை வழங்குபவன் நீயே. 

502. ஸ்ரீ கு3ரவே நம:

ஶிஷ்யோபதே3ஶகனேகு3ரவேநமோ நினகெ3

தோயஜாஸன ஆதி3கவிகெ மொத3லுபதே3

ஸவ்யஸாசிகெ3 கீ3தெ உபதே3 மாடி3தி3 ஹாகு3

ஶிஷ்ய ஸர்வர்கு3 அனிமித்த முக்2 கு3ரு நீனேவெ 

சிஷ்யர்களுக்கு உபதேசம் செய்பவனே. குருவே உனக்கு என் நமஸ்காரங்கள். ஆதிகவியான பிரம்மதேவருக்கு முதலில் உபதேசம் செய்தவனே. அர்ஜுனனுக்கு கீதை உபதேசம் செய்தாய். மற்றும் சிஷ்யர்கள் அனைவருக்கும் எதையும் எதிர்பார்க்காத முக்கிய குரு நீயே. 

503. ஸ்ரீ உத்தராய நம:

ஸம்ஸாரோத்தாரகனுஉத்தரநமோ நமோ எம்பெ3

ஸம்ஸாரனீகி3ஸி ஸுமோக்ஷவன்னீவி நீ முகுந்த3

அஸம ஸம்பூர்ண கு3ணக3ணார்ணவ அனக4னு

ஸ்ரீ ஸர்வோத்தம ஞான 4க்தி விஷய உபாஸ்ய 

சம்சார சுழற்சியை நீக்குபவன் நீயே. உத்தரனே உனக்கு என் நமஸ்காரங்கள். சம்சாரத்தை நீக்கி மோட்சத்தை அருள்பவன் நீயே. முகுந்தனே. சமமற்ற, முழுமையான, குணங்களின் கடலே. லட்சுமிதேவியின் தலைவனே. ஸர்வோத்தமனே. ஞான பக்திகளால் வணங்கப்படுபவனே.


***


No comments:

Post a Comment