Thursday, June 22, 2023

#192 - 564-565-566 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***  

564. ஸ்ரீ அச்சுதாய நம:

ஜக3தை3ஶ்வர்யதி3 ச்யுதிரஹிதஅச்யுதநமோ

அகா4தி3 தோ3ஷதூ3 ஸ்வதந்த்ர ரூபகு3ணதி3பூர்ண

ஸுக2 சின்மாத்ரவஸு ச்யுதி இல்லத3 சார்வங்க3னு

அக3ணித மஹைஶ்வர்ய ஸதா3பூர்ண நாராயண 

அபாரமான செல்வங்களைக் கொண்டவனே. அழிவில்லாதவனே. அச்யுதனே. உனக்கு என் நமஸ்காரங்கள். எவ்வித தோஷங்களும் அற்றவனே. ஸ்வதந்த்ரனே. ரூப குணங்களை பூர்ணமாக கொண்டவனே. சுக சின்மயனே. குறை இல்லாத தேகம் கொண்டவனே. கணக்கிடமுடியாத அபாரமான செல்வங்களைக் கொண்டவனே. பூர்ணனே. நாராயணனே. 

565. ஸ்ரீ வருணாய நம:

4க்தரிந்த3 ஸ்ரத்3தெ4யிம் 4ஜனீயவருணநமோ

உத்தம வாயுகெ3 ஸ்ரீபனேவே இஷ்டனு வரணீய

ததி3தர 4க்தரிகெ3 மோக்ஷோத்3தே3ஶதி3 நீ வரணீய

4க்தஸாமான்யரிகெ3 2லோத்3தே3 வரணீய 

பக்தர்களால் சிரத்தையுடன் வணங்கப்படும் வருணனே உனக்கு என் நமஸ்காரங்கள். வாயுதேவருக்கு, ஸ்ரீலட்சுமிதேவிக்கு ப்ரியமானவனே. உன்னை வர்ணிக்கும் பக்தர்களுக்கு மோட்சத்தையே கொடுப்பவனே. மற்ற பக்தர்களுக்கு அவரவர்களின் யோக்யதைக்கேற்ப பலன்களை கொடுப்பவனே. 

566. ஸ்ரீ வாருணாய நம:

வரணீய ஹரி ஸமர்ப்பக 4 த்3ரவ்யதா3

வாருணநமோ பூஜாத்4யான கீர்த்தன 4ஜனதி3

ஹரி நீ கொட்ட த்3ரவ்யக3ளிம் 4க்தியுக் அர்ப்பிஸலு

ஸுப்ரீதியிம் யோக3க்ஷேம வஹிஸி ப்ரஸாத3 ஈவி 

பூஜிக்கும் பக்தர்களுக்கு தன, த்ரவியங்களை அளிப்பவனே. வாருணனே. உனக்கு என் நமஸ்காரங்கள். பூஜை, தியான, கீர்த்தன, பஜனை ஆகியவற்றை செய்து, நீ கொடுத்த பொருட்களை உனக்கே அர்ப்பணம் செய்தால், மிகவும் மகிழ்ந்து, பக்தர்களின் நலன்களை காத்து, தக்க பிரஸாதத்தை அருள்கிறாய்.

***


No comments:

Post a Comment