Thursday, June 29, 2023

#196 - 576-577-578 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***   

576. ஸ்ரீ ஜ்யோதிராதி3த்யாய நம:

த்3ருதியுத ஸோமக்கெ மொத3லு உத்திஷ்டனாகி3

ஜ்யோதிராதி3த்ய நமோஜ்யோதிஷாம்ஆதி3ஜ்யோதியாத3

மார்த்தாண்ட3னல்லி அந்தர்க3தனாகி3ருவவனு நீ

ஜ்யோதி ஶப்43தி3 வாச்யனு பரஞ்யோதி நாராயண 

சந்திரனுக்கு ஒளி கொடுப்பவனான (சந்திரனைவிட ஒளி பொருந்தியவனான) ஜ்யோதிராதித்யனே உனக்கு என் நமஸ்காரங்கள். ஆதிஜ்யோதியான, சூரியனில், அந்தர்யாமியாக இருப்பவனே. ஜ்யோதி என்று அழைக்கப்படுகிறாய். பரஞ்சோதியே. நாராயணனே. 

577. ஸ்ரீ ஸஹிஷ்ணவே நம:

ஸோமரஸ ப்ராஶன மாள்பஸஹிஷ்ணுநமோ எம்பெ3

ப்ரேம வாத்ஸல்யதி3ந்த3 4க்தக்ருத அபராத4

வைமனஸ்ஸு மாட3தெ3 ஸஹன மாடி3ஸுவி 3யாவந்த

அமல ஔதா3ர்யதி3 கு3ஶீல ஸ்ரீராமசந்த்ர 

ஸோமரஸத்தை ஏற்றுக் கொள்பவனே ஸஹிஷ்ணுவே உனக்கு என் நமஸ்காரங்கள். மிகவும் அன்புடன், பாசத்துடன், பக்தர்கள் செய்யும் தவறுகளை பொருட்படுத்தாமல், பொறுத்துக்கொள்கிறாய். கருணைக்கடலே. திடமான கருணை கொண்டவனே. குணஷீலனே. ஸ்ரீராமசந்திரனே. 

578. ஸ்ரீ 3திஸத்தமாய நம:

அதிக3திவுள்ளவனு 3திஸத்தம நமஸ்தே

ஶ்ருதி அனேஜதே3கம் மனஸோ ஜவியோ மத்தூனூ

தத்3தா4வதோ அன்யா ஶ்யேதி திஷ்டத்எந்து3 ஸாருத்தெ

இந்த மஹிமன்ன ஸாகல்யேன திளியலஷக்ய 

அதிகமான வேகம் கொண்டவனே. கதிஸத்தமனே உனக்கு என் நமஸ்காரங்கள். அனேஜதேகம் என்று துவங்கும் ஸ்ருதி உன்னையே புகழ்கிறது. இத்தகைய மகிமைகளைக் கொண்ட உன்னை முழுமையாக அறிவது அஸாத்தியம் ஆகிறது. 

***


No comments:

Post a Comment