Saturday, June 3, 2023

#173 - 507-508-509 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

 ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

507. ஸ்ரீ புராதனாய நம:

பரம முக்2யஸுக2 விஸ்தாரகபுராதனநமோ

புரஶ்ரேஷ்ட வைகுண்டாதி3 ஸ்தா2னதி3 ஸுக2விஸ்தாரா

ஸ்ரீ ரமாபதி நீனு மாடி3 4க்தரிகொ33கு3வி

பரம ப்ராசீன முக்2யஸ்வாமி ஸனாதன ஸ்வதந்த்ர 

முக்கிய சுகமான மோட்சத்தை கொடுப்பவனே. புராதனனே. உனக்கு என் நமஸ்காரங்கள். வைகுண்டாதி அனைத்து சுக ஸ்தானங்களிலும் இருப்பவனே. ரமாபதியே. நீயே பக்தர்களுக்கு அருள்கிறாய். அனைத்திற்கும் முதல்வன் நீயே. ஸனாதனனே. ஸ்வதந்த்ரனே. 

508. ஸ்ரீ ஶரீரிணே நம:

ஶ்ரய நியாமகனு ஸர்வலோகதா3னந்த3க்கெ

ஶரீரிஎந்தெ3னிஸுவியோ நமோ ஸர்வ அந்தஸ்த2

சராசர ஸர்வத்ரதொ3ளிப்ப சேஷ்டகனு நீனு

ஶரீரஸ்த2 க்ருத்திவாஸ ப்ரக்ருதே: பர: சின்மாத்ரா 

அனைத்து உலகங்களின் ஆனந்தத்திற்கு நீயே கதியாக இருக்கிறாய். ரீரிணே என்று அழைக்கப்படுகிறாய். உனக்கு என் நமஸ்காரங்கள். அனைவரிலும் அந்தர்யாமியாக இருப்பவனே. அனைத்து செயல்களையும் அனைவரின் மூலம் செய்விப்பவனே. சின்மயனே. 

509. ஸ்ரீ பூ4தக்ருதே நம:

அனாதிஞான வ்யக்தமாள்பபூ4தக்ருத்நமோ எம்பெ3

அனாதி3 ஸ்வரூப பூ4தக்ஞான ஸ்வாமி நின்னிச்செயிம்

நீனே ப்ரக்ருதி ஸம்ப3ந்த4தி3ம் மரெயாத3 ஞானவ

4னத3யதி3 வ்யக்தமாடு3வி 4க்திஸாதகர்கெ3 

அனாதி ஞானத்தை கொடுப்பவனே. பூதக்ருதே உனக்கு என் நமஸ்காரங்கள். அனாதி ஸ்வரூப பூதஞானனே. ஸ்வாமியே. உன் இஷ்டத்தினாலேயே, நீயே ப்ரக்ருதியின் சம்பந்தத்தினால் மறைந்த ஞானத்தை மறுபடி வெளிப்படுத்தி, பக்தியை செலுத்துபவர்களுக்கு கொடுப்பாய். 

***


No comments:

Post a Comment