Sunday, June 4, 2023

#174 - 510-511-512 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

 ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

510. ஸ்ரீ போ4க்த்ரே நம:

ஸமுத்3 பூரணாதி3 நின்ன ஸ்வமஹிமெ பாலக

ஸமஹார்ஹபோ4க்தநமோ நமோ என்னுவெ நினகெ3

அமித ஆனந்த3 ஸுப்ரசுர நீ நின்ன ஸ்வரூப

ஸுமஹிமெக3 நித்ய அனுப4விபி அனக4 

கடல் போல பூரணமான மகிமைகளைக் கொண்டவனே. போக்த்ரனே உனக்கு என் நமஸ்காரங்கள். அற்புத ஆனந்தத்தை வெளிப்படுத்துபவனே. உன் ஸ்வரூப மகிமைகளை தினமும் (எப்போதும்) அனுபவிக்கிறாய். அழிவில்லாதவனே. 

511. ஸ்ரீ கபீந்த்ராய நம:

ஸுக2 த்3ரவிணவந்த நீ ஸ்துதிஸாமர்த்2 ஈவியோ

ஸ்ரீகபீந்த்ரனேநமோ ஸுபூர்ணைஶ்வர்ய லக்ஷ்மீபதே

ஸுக்3ரீவ ஹனுமதா3தி33ளிகெ3 இந்த்3 ஸ்ரீராம நீ

ஸுகா2தை3ஶ்வர்ய முக்தாமுக்தரிகீ3வி யதாயோக்3 

அபாரமான சுகத்தை கொண்டவனே. ஸ்துதிகளை படிக்கும் சாமர்த்தியத்தை அருள்வாயாக. ஸ்ரீகபீந்த்ரனே. உனக்கு என் நமஸ்காரங்கள். அபாரமான செல்வங்களை கொண்டவனே. லட்சுமிபதியே. சுக்ரீவ, ஹனுமன் ஆகியோருக்கு தலைவனே. ஸ்ரீராமனே. முக்தர்கள், அமுக்தர்கள் என அனைவருக்கும் சுகாதி அனைத்து செல்வங்களையும், அவரவர் யோக்யதைக்கேற்ப வழங்குபவனே. 

512. ஸ்ரீ பூ4ரித3க்ஷிணாய நம:

மஹா ஸ்வச்சந்தானுவர்த்தியேபூ4ரித3க்ஷிணநமோ

3ஹு ஶ்வமேதா4தி3 யக்ஞக3 நீ ஆசரிஸி

3ஹள 3க்ஷிணெய கொட்டி லோக ஶிக்ஷணெ க்ஷேமக்கெ

மஹா ஸாமர்த்யபூர்ண ஸ்வதந்த்ர பூ4ரித3க்ஷிணனு 

யாருடைய உதவியும் இன்றி அனைத்து செயல்களையும் செய்பவனே. பூரிதக்‌ஷிணனே உனக்கு என் நமஸ்காரங்கள். பற்பல அஶ்வமேத யாகங்களை நீ செய்து, அபாரமான தக்‌ஷிணைகளை கொடுத்தாய். உலக நன்மைக்காக அற்புத சாமர்த்தியத்தை கொண்டவனே. ஸ்வதந்த்ரனே. பூரிதக்‌ஷிணனே. 

***


No comments:

Post a Comment